» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு : காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு!

திங்கள் 22, ஜூலை 2024 3:24:23 PM (IST)

மெஞ்ஞானபுரத்தில் தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

திருநெல்வேலி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்  உமா மகேஸ்வரி நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தனியாக சுற்றித்திரிந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அந்த சிறுவன் தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் 11வது வகுப்பு படிக்கும் மாணவன் என்பதும், அவனது தந்தை திட்டியதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக மெஞ்ஞானபுரம் காவல் நிலைய சிஐடி போலீஸ் அந்தோணிகுமாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  பின்னர் உடனடியாக சிஐடி போலீஸ் அந்தோணிகுமார் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  கணேசன் ஆகியோர் விரைந்து செயல்பட்டு சிறுவனை மீட்டு உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். வீட்டை விட்டுவிட்டு வெளியேறிய சிறுவனை பத்திரமாக மீட்டு எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து துரிதமாக செயல்பட்டு அவனது உறவினரிடம் ஒப்படைக்க உதவிய திருநெல்வேலி இன்ஸ்பெக்டர்  உமா மகேஸ்வரி, சார்பு ஆய்வாளர்  கணேசன் மற்றும் சிஐடி போலீஸ்  அந்தோணிகுமார் ஆகியோரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory