» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்கிள் ஓடை கரையை உயர்த்த வேண்டும் : இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி கோரிக்கை

திங்கள் 22, ஜூலை 2024 3:03:50 PM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளம் 4 வழிச் சாலை சந்திப்பு முதல் வடபுறம் சுப்பிரமணியபுரம் வரை செல்லும் பக்கிள் ஓடை கரையை உயர்த்தி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் மெயின் பஜார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து வடபுறம் சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் வலப்புறம் காட்டாற்று வெள்ளம் குளத்திற்கு செல்லும் வகையில் பக்கீள் ஓடையும் இடப்புறம் பிரதான சாலையும் உள்ளது. 

இந்த சாலை வழியாகத்தான் சுப்பிரமணியபுரம், கைலாசபுரம், நாச்சியார்புரம், முத்துசாமிபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி வரை செல்லும் பேருந்துகள் சென்று வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வந்த மழை வெள்ளத்திலும் அதன் பிறகு தற்போது வந்த மலை வெள்ளத்திலும் மேற்படி பக்கீள் ஓடை கரைச்சுவர் முற்றிலுமாக சேதம் அடைந்து சாலை மேடு அடைந்து விட்டது. சாலையின் இடப்புறம் சுப்பிரமணியபுரம் வரை சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக ஒரு பேருந்து செல்லும்போது எதிர்புறம் இரு சக்கர வாகனம் கூட வர முடியாத நிலை இப்பகுதியில் உள்ளது. இதனால் அடிக்கடி இப்பகுதிகளில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் கால்வாயில் விழுந்து எழும் அபாய நிலை உள்ளது. சமீபத்தில் வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்தது. சாலையை சீர் செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

எனவே பொதுமக்களின் நலன் கருதி பக்கிள் ஓடை கால்வாயில் சாலைக்கு உயரமாக பக்கவாட்டு சுவர் அமைத்து தருவதுடன் சாலையில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய சாலைக்கு இடதுபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory