» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை!

திங்கள் 22, ஜூலை 2024 12:58:23 PM (IST)



தமிழகத்தில் திமுக அரசு சமீபத்தில் உயர்த்திய மின்சார கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு மக்கள் மீது பெரும் சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக பால் கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் பதிவு உயர்வு, குப்பைக்கும் வரி, குடிநீர் கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என்று கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் தற்பொழுது மின்சார கட்டண உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள், தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், சிறு, குறு வணிகர்கள் மற்றும் இசைத்தறி, நூற்பாளர்கள் போன்ற பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். ஆகவே தமிழக அரசு எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு மேல் குறை சொல்லாமல் உயர்த்திய மின்சார கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டுகிறோம். 

அதுமட்டுமல்லாது அறிவிக்கபடாத மின்வெட்டு தொடர்கிறது. மின்சார வைப்புத் தொகை, மின்சார நிலைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. புதிய மின் உற்பத்திக்கான திட்டங்கள் இல்லை. மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்திக்கு குறிப்பாக சூரிய ஒளி மின் ஊக்குவிப்பு திட்டம், காற்றாலை மின் ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். மேலும் தற்பொழுது செயல்பட்டு வருகின்ற அனல், புனல், நிலக்கரி நீர்மின் திட்டங்களை சீரமைத்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

நவீனப்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கும் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கும் மின் கொள்முதலை குறைத்து தமிழக அரசு தன் மாநில சுயதேவைக்கு தேவையான மின் உற்பத்தியை பெருக்கி மின் இழுப்பு சதவீத்தை குறைத்து, நஷ்டத்தில் இயங்கி வரும் மின்சார உற்பத்தி கழகம் இலாபத்தில் இயங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory