» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கும் அரசாணை அமல்படுத்தக் கோரிக்கை!

திங்கள் 22, ஜூலை 2024 12:39:40 PM (IST)



கள்ளர், மறவர் அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என ஒரே பெயராக அழைக்க அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சிடம் அளித்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையர் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசால் 1994ல் அறிவிக்கப்பட்டு கடந்த 11.09.1995 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் அரசாணை வெளியிடப்பட்டது. 

ஆனால் அரசாணையை இதுவரை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 20 முதல் 23 சதவீதம் பேர் வரை தேவர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர் எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் கீழ் தேவர் சமுதாயத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசாணையை முறையாக தமிழ்நாடு அரசு அமல்படுத்தினால் மட்டுமே எங்கள் சமுதாய மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையாக வளர்ச்சியடைய முடியும். 

மேற்கண்ட கோரிக்கை சம்பந்தமாக மதுரை மேலூரை சேர்ந்த எங்கள் சமுதாய வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரனை நடத்திய நீதிமன்றம் இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என கூறி இந்த வழக்கினை தள்ளுபடி செய்தது. தற்போது இது சம்பந்தமான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்ககோரி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் ஒரு அங்கமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கள்ளர், மறவர் அகமுடையார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவர் அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory