» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காந்திய விருது வழங்கும் விழா
செவ்வாய் 3, அக்டோபர் 2023 7:54:46 AM (IST)

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நலம் மன்றம், காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்கம், சேவா கல்வி அறக்கட்டளை இணைந்து காந்தி ஜெயந்தி விழாவை நடத்தியது. ஆசிரியை மாரியம்மாள் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் தலைவர் மைதிலி அவர்கள் தலைமை தாங்கினார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார்.
காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்க மாவட்ட தலைவர் சு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஜே இ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் அவர்களின் நேர்மையைப் பாராட்டி அவர்களுக்கு காந்திய விருது வழங்கப்பட்டது. தொழிலதிபர் செல்வராஜ், வழக்குரைஞர் விஜய சுந்தர் மற்றும் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் அவர்களுக்கும் அவர்களுடைய சேவையை பாராட்டி காந்திய விருது வழங்கப்பட்டது. புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
காந்தி குறித்து பேசிய குழந்தைகளுக்கு பத்மலதா பரிசு வழங்கினார். காந்தி குறித்து கவிதை எழுதி வாசித்தவர்களுக்கு சர்வேயர் குருசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியை தேவி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம், காந்திய வழியில் ஊருக்கு 10 பேர் இயக்கம், சேவா கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தது. விழாவில் குடியிருப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










