» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்!

திங்கள் 2, அக்டோபர் 2023 3:34:48 PM (IST)



தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 100 அணிகள் பங்கேற்ற கலைஞர் கோப்பை காண கிரிக்கெட் போட்டி மீள விட்டான் பெரியசாமி திடலில் வைத்து நடைபெற்றது. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் கிளப் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. 

இதன் இறுதிப் போட்டியில் எம்எஸ்எம் கிரிகெட் கிளப் அணியும் விக்டரி கிரிக்கெட்கிளப் அணியும் மோதின. முதலில் ஆடிய எம்எஸ்எம் அணி 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சத்யராஜ் 15 பந்துகளில் 65 ரன்களும், மகாராஜா 15 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர். இதை தொடர்ந்து விளையாடிய விக்டரி கிரிக்கெட் கிளப் அணி 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எம்எஸ்எம் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர். முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக 30,000 வழங்கப்பட்டது.  பரிசளிப்பு விழாவில், திமுக மாநகர செயலாளர் ஆனந்த்சேகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் நம்பி,  மாவட்ட அமைப்பாளர் பாலகுருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory