» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் பயணிகளை ஏற்றாமல் சென்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:21:51 PM (IST)

நாசரேத் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாமல் விட்டு சென்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயிலால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் தினமும் நாசரேத் ரயில் நிலையத்திற்கு 12:45 க்குவந்து12:50க்குபுறப்பட்டு திருநெல்வேலி செல்கிறது. நாசரேத்தில் நேற்று பாலக் காடு எக்ஸ்பிரஸ் இரயிலு க்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நாசரேத் இரயில் நிலையத்தில் பயணிகள் ஏற முடியாமல் தவித்தனர். ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விழும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவனின் குடும்பத்தினர் பதறி போய் இரயிலில் ஏறமுடியாமல் வண்டியை விட்டு விட்டனர்.
அது மட்டுமல்லாமல் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் குறைந்த அளவு பெட்டிகளையே கொண்டிருப்பதால் ஒவ்வொரு பெட்டியிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு உள்ளது. இதனால் பயணிகள் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் ஏறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதுகுறித்து நிலைய அதிகாரிகளிடம் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு புகார் செய்தனர் ஆனால் அவர்களது ஏற்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிக்கெட் பணத்தை திரும்ப தருமாறு கோரிக்கை வைத்தனர் அதற்கும் அவர்கள் செவி சாய்க்காததினால் ஒருவர் டிக்கெட் கவுண்டரில் ஓங்கி அடித்தார்.
அதில் கண்ணாடி இருந்ததால் கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. கண்ணாடி வெட்டி அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரயில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் இரயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைத்து பயணிகளுக்கு உதவிடுமாறு பொதுமக்கள், இரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
BalamuruganOct 3, 2023 - 08:32:14 PM | Posted IP 172.7*****
அதிக பெட்டிகளை இனைக்கவேண்டும்
ஒட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 09:15:00 PM | Posted IP 162.1*****
ரயில் பெட்டியில் எத்தனை பேர் ஏற்ற வேண்டும் என்று என்று கொஞ்சம் கூட அறிவு இல்லை, அளவுக்கு மீறினால் ஆபத்து.
NameOct 2, 2023 - 05:17:28 PM | Posted IP 172.7*****
Vandi la yera mudila nu news podunga ok va
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ManikandanOct 4, 2023 - 03:58:48 PM | Posted IP 172.7*****