» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மறைந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி : எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்
சனி 30, செப்டம்பர் 2023 3:37:53 PM (IST)

தூத்துக்குடியில் சமீபத்தில் காலமான தலைமை காவலர் துரைபாண்டியின் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் துரைபாண்டி என்பவர் கடந்த 27.07.2023 அன்று உடல்நலகுறைவால் காலமானார். அவருடன் 2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு உதவும் கரங்கள் 2003 சார்பாக ரூபாய் 29,28,500/- பணம் நன்கொடையாக பெற்று, அவற்றை காப்பீட்டு பத்திரங்கள், காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க வைப்புத் தொகை ரசீதுகளாக இன்று வழங்கப்பட்டது.
தூத்துக்ககுடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 2003ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் துரைப்பாண்டி அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்," ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 2003ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக துரைப்பாண்டி அவர்களது குடும்பத்தார் சார்பாகவும், மாவட்ட காவல்துறை சார்பாகவும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்த நிதியை திரட்டிய 2003ம் ஆண்டு காவலர்கள் உதவும் கரங்கள் 2003 குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










