» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அக்.25 இல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை!

சனி 30, செப்டம்பர் 2023 11:41:11 AM (IST)

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை வருகிற அக்.25ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. 

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் ஞாயிறு ஆராதனை யில் குடும்பங்களின் ஒரு நாள் வருமான காணிக்கை அந்தந்த ஆலயங்களில் படைத்தல் நிகழ்வும், 03.10.23 செவ்வாய்கிழமை நிறுவனங்களின் ஊழியர் கள் ஒருநாள் வருமான காணிக்கைப் படைத்தல் நிகழ்வும்,

10.10.23 செவ்வாய் கிழமையன்று மிஷனெரி களை நினைவு கூரும் பவனி தூத்துக்குடி டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம் முன்பிருந்து புறப்பட்டு சாயர்புரம்,நரசரேத் முதலூர் ஆகிய ஊர்களில் உள்ள மிஷனரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், 14.10.2023 சனிக்கிழமைதூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் திறன் காண் போட் டிகளும், 

21.10.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளா கத்திலிருந்து  புறப்பட்டு சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம் வரை பவனி சென்றடைகிறது. மாலை 6 மணிக்கு சண்முகபுரம் தூய பேதுரு ஆலய வளாகத்தில் கொடி ஏற்றம் நிகழ்வு நடக் கிறது. மாலை 6.30 மணிக்கு திருச்சபை கலைநிகழ்ச்சி கள் சண்முகபுரம் தூய பேதுரு ஆலய வளாகத்தில் நடைபெறுகிறது. 23.10.23 திங்கள்கிழமை சாயர்புரம் போப்கல்லூரிவிளையாட்டு மைதானத்தில் குருமார் விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.

24.10.23 செவ்வாய்கிழமை மாலை  7.00 மணிக்கு நாச ரேத் தூய யோவான் பேரா லயவளாகத்தில் திருச்சபை யின் சார்பில் கலை நிகழ்ச் சிகள் நடைபெறுகிறது.  25.10.2023 புதன்கிழமை காலை  9.00 மணிக்கு நாச ரேத் தூய யோவான் பேரா லயத்தில் ஸ்தோத்திரப் பண்டிகை மற்றும் திருவி ருந்து ஆராதனை நடைபெ றுகிறது.தேவசெய்தியை மதுரை- இராமநாதபுரம் திருமண்டல பேராயர்ஜெய சிங் பிரின்ஸ் பிரபாகரன் கொடுக்கிறார். காலை 11 மணிக்கு வருடாந்திரக் கூட்டம் நடக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகளை பேராயர் பொறுப்பும் பிரதம பேராயரின் ஆணையாளரு மான பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் திருமண்டல உபதலைவர் தமிழ்ச்செல்வன், லே செய லாளர் நிகர் பிரின்ஸ் கிப்ட் சன்,குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

Agastin BaulrajSep 30, 2023 - 06:04:53 PM | Posted IP 172.7*****

The Diocese should use the money collected towards the development of hospitals, institutions to run in a sustainable manner.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory