» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!

வியாழன் 1, ஜூன் 2023 8:33:27 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில்அதிக அளவில் கனிமங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து உரிய அனுமதிசீட்டுகள் இல்லாதது கண்டறியப்படின் சட்டம் மற்றும் விதிகளின் படி வாகனங்களை கைப்பற்றி வாகன உரிமையார்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காகாவும், அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிக பாரம் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனி வட்டாட்சியர்கள் தலைமையில் 7 சிறப்பு குழுக்கள் அமைத்;து மாவட்ட ஆட்சியர் அவர்களின் 05.05.2023 நாளிட்ட ஆணையின் படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேற்படி சிறப்பு குழுக்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களும் இடம் பெற்றுள்ளனர். 05.05.2023 முதல் 31.05.2023 வரை தனி வட்hட்சியர்கள் தலைமையிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டத்தில் காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோட்டியோடு, இறச்சகுளம், அழகியபாண்டிபுரம், வெள்ளமடி, குளச்சல், கருங்கல், புதுக்கடை, கொல்லங்கோடு,மார்த்தாண்டம், களியக்காவிளை, படந்தாலுமூடு, நெட்டா, செங்கவிளை, சுருளகோடு, சித்திரம்கோடு குலசேகரம், சாமியார்மடம், ஆற்றூர், அருமனை, களியல், ஆகிய பகுதிகளிலும் திடீர் தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் 29 வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் தக்க அபராத நடவடிக்கை எடுப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆணையர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அவர்களின் 04.04.2023 நாளிட்ட செயல்முறை ஆணைகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதிசீட்டு இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக துணை இயக்குநர்(கனிமம்) தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து 01.05.2023; முதல் 31.05.2023 வரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றிச் சென்ற 195 வாகனங்களை தடுத்தி நிறுத்தி சோதனை செய்ததி 41 வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் எடுத்துச்சென்றது கண்டறியப்பட்டு, மேற்படி 41 வாகனங்களும் கனிமங்களுடன் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதிசீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் சென்ற 9 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு, தொடர்புடைய நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்துச் சென்ற 27 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory