» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியால் தாக்கி செல்போன் பறித்த ரவுடி கைது!

புதன் 31, மே 2023 9:23:40 PM (IST)

ஆத்தூர் அருகே கத்தியால் தாக்கி செல்போனை பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/bilawalbhuto_1671370745.jpgதூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிமுத்து (51) என்பவர் பழைய காயல் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து நேற்று இரவு வேலை முடித்துவிட்டு கம்பெனி அருகே பஸ் ஏற நின்ற போது அங்கு வந்த மர்ம நபர்கள் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அவரது செல்போனை கொள்ளையடித்ததுடன் கத்தியால் தாக்கி விட்டும் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி இன்று அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் மேற்படி சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் சிவபிரகாஷ் (20), ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான சுடலை மகன் முத்துக்குமார் (21) மற்றும் சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (22) ஆகியோர் மேற்படி மாரிமுத்துவை கத்தியால் தாக்கி செல்போனை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்து தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளையும் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் 3 கொலை மிரட்டல் வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

இதுக்குதான்மே 31, 2023 - 11:17:08 PM | Posted IP 162.1*****

இங்கிலீஷ் காரங்க குற்ற பரம்பரை சட்டம் கொண்டு வந்தாங்க...

செல்வகுமார்மே 31, 2023 - 10:17:27 PM | Posted IP 172.7*****

இன்னும் அவர்கள் மீது பத்து வழக்குகள் இருந்தாலும் வெளியே சுதந்திரமாக சுற் சட்டம் உதவும்.... பிறுகு எதற்கு ......கைது?

திருட்டுமே 31, 2023 - 10:17:19 PM | Posted IP 162.1*****

பரம்பரைகள் திருட்டு பரம்பரைகள் தான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory