» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவது என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் "தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 58 கோடி 67 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
ஜெயராஜ் கட்டப்பட்டுள்ள பல அடுக்க வாகன காப்பகம், பேருந்து பணிமனை ஆகியவற்றிற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவது, மணல் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக கொறடா மந்திரமூர்த்தி பேசுகையில், சமீபத்தில் அண்ணா சிலை அருகே மின்சாரம் தாக்கி இறந்த கீரை வியாபாரி ஜெயகணேசுக்கு மாநகராட்சி இழப்பீடு வழங்க வேண்டும், சத்யா நகர் பாலம் இறக்கத்தில் உள்ள ரவுண்டனாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுபோல் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி பேசினர். முன்னதாக மேயர் தலைமையில் மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொன்டனர்.
மக்கள் கருத்து
jesusJun 1, 2023 - 09:44:41 PM | Posted IP 162.1*****
Bus stand nu peru vaikkanum... Illana John, Joseph... Apdi vaikkanum...
வாசுகிJun 1, 2023 - 09:43:08 PM | Posted IP 162.1*****
பேருந்து நிலையம் என்று வைக்கலாம்
Muthu mahaமே 31, 2023 - 10:25:45 PM | Posted IP 172.7*****
VOC பெயர்தான் மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும் நம் தூத்துக்குடிக்கு. செக்கிலுத்த செம்ம செம்மல்.
KARNARAJ RAMANATHANமே 31, 2023 - 06:51:07 PM | Posted IP 162.1*****
VOC, BHARATHIYAR, ANNADURAI, AVVAIYAR, THIRUVALLUVAR NAMES CAN BE PUT INSTEAD OF PURE POLITICIANS
அடமே 31, 2023 - 05:55:10 PM | Posted IP 172.7*****
காமராஜர் , VOC .. பெயர் வையுங்கடா
அருமைமே 31, 2023 - 03:26:19 PM | Posted IP 162.1*****
அருமை... குணத்தில் சிறந்தவர் கலைஞர்...
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

ஓட்டு போட்ட முட்டாள்Jun 2, 2023 - 09:20:52 AM | Posted IP 162.1*****