» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

கோவில்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியினர் உடுக்கை வாசித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
இதில், உடுக்கை வாசிப்பாளர் தட்சிணாமூர்த்தி உடுக்கை வாசித்தபடி மது ஒழிப்பு சம்பந்தமான பாடலைப் பாடினார். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கினர். இதில் தமிழ் மாநில கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் கே.பி.அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
ஒன்னும்மே 31, 2023 - 03:27:17 PM | Posted IP 162.1*****
பண்ண வேண்டாம்... நேரா போய் குடிப்பவனை திருத்துங்கள்... வாங்குறவன் இல்லைனா விக்குறவன் இல்லை...
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

VASANமே 31, 2023 - 04:52:07 PM | Posted IP 172.7*****