» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)
தூத்துக்குடி பைக் - லாரி மோதிய விபத்தில் துறைமுக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிப்பிகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லாம்பெட் மகன் ஷெல்டன் (45) . இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு தனது பைக்கில் கிரீன் கேட் உள்ளே நிலக்கரி கப்பல்கள் நிற்கும் தளத்திற்கு சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி கீழே விழுந்தார்.
அப்போது லாரியின் பின் டயர், ஷெல்டன் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தெர்மல் நகர் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)
