» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு!
புதன் 31, மே 2023 11:54:31 AM (IST)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 5 அலகுகளில் நாள்தோறும் தலா ஒரு அலகில் 210 என மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 3 ஆவது அலகு கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

Citizenமே 31, 2023 - 12:01:22 PM | Posted IP 162.1*****