» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம், துறையூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகர் மணல் கொள்ளை தடுப்பின்போது  தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்ப சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட துணை தலைவர் சரவண பெருமாள் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார். வட்டச் செயலாளர் மாடசாமி நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory