» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

செவ்வாய் 30, மே 2023 4:13:24 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் போர்வெல் மூலமாக குடிநீர் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், தூத்துக்குடி மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை முறையாக பதிவு செய்து லாரி வைத்து மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, கிராமபுரங்களில் குடிநீர் கொடுக்கப்படாத இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கி வருகிறோம். திருமணம் கோவில் திருவிழா மற்றும் ஈமச்சடங்கு போன்ற பல இடங்களில் பொது மக்களுக்கு 35 ஆண்டு காலமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.

கடந்த 1998 முதல் 2012 மற்றும் 2019-ம் ஆண்டு மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி உத்தரவின்பேரில் பொது மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தோம். மேலும் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து வரும் பகுதிகளில் ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக குடிநீர் எடுத்து வர தடை ஏற்படுத்தி வருவதால் நாங்கள் பெரும் கஷ்ட நஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். எங்கள் வாழ்வாதாராம் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது எங்கள் சங்க லாரிகள் மூலம் அரசுக்கு உறுதுணையாக வெள்ளம் ஏற்பட்ட தேங்கி கிடந்த தண்ணீரை அகற்றினோம். நாங்கள் குடிநீர் சேவையை நிறுத்தினால் பொது மக்களும், தொழிலாளர்களும், மீனவ தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தயவு கூர்ந்து எங்களது தொழில் செய்ய அனுமதித்தும் பொது மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும் உரிய அனுமதி வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

இது திருட்டுமே 30, 2023 - 04:21:47 PM | Posted IP 162.1*****

பரம்பரைகள் செய்த காரியம்... விரைவில் அரசு அனுமதி அளிக்கும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory