» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீதிமன்ற உத்தரவினை மீறும் தனியார் சந்தை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 27, மே 2023 8:32:22 AM (IST)
கோவில்பட்டியில் நீதிமன்ற உத்தரவினை மீறி செயல்படும் தனியார் தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வித உரிய அனுமதியும் பெறமால் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருவதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் நோட்டிஸ் வழங்கிய பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தினால் இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதம் 26ந்தேதி வரை தனியார் தினசரி சந்தை செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்ற உத்திரவினை மீறி தனியார் தினசரி சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதைக்கண்டித்தும். நீதிமன்ற உத்தரவினை அமுல்படுத்த வலியுறுத்தி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா, திட்டங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவு குறித்து நகல் தங்களுக்கு வரவில்லை, வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சரவணன் தற்போது நீதிமன்ற உத்தரவு நகல் வழங்கியுள்ளார்.
எனவே இது குறித்து கோட்டாட்சியருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நிதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தினை கைவிட்டனர்.நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின்னரும், தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருவது மட்டுமின்றி, அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

சீராக குடிநீர் வழங்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:38:32 PM (IST)

santhaiமே 28, 2023 - 05:32:08 AM | Posted IP 172.7*****