» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் : தமிழ்நாடு அரசுக்கு நன்றி

சனி 6, மே 2023 2:45:44 PM (IST)



உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் மா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை : இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது.தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. உப்பளதொழிலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணி செய்கிறார்கள்.

சுதந்திர காலம் முதலே சுட்டெரிக்கும் வெயிலில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி போதிய வேலை வாய்ப்பு, நியாயமான கூலி, பாதுகாப்பான பணிச்சூழல், வீட்டு வசதி, விபத்து பாதுகாப்பு என்று எவ்வித தொழிலாளர் நலன்களுக்கும், உரிமைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் உரிய உத்திரவாதம் இல்லாமல் வாழ்ந்து வரும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நெடிய வருட கோரிக்கையான மழைக்கால நிவாரணம், உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் வேண்டும் என்பதனை கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கட்சி தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதுடன் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக வருடத்திற்கு ரூ5000 வழங்க அரசாணையை வெளியிட்டு 2022 ம் காலகட்டத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூபாய் 5000 ம் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் 12.4.2023 ல் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம்- 1982 ன் கீழ் உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பை உப்பள தொழிலாளர்களின் கரிக்கும் வாழ்வினை இனிக்க செய்வதற்கான விடியலுக்கான அறிவிப்பாக பார்க்கிறோம்.

மேலும் இந்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களின் கீழ் நல வாரியங்கள் அனைத்தும் கலைக்கப்படும் என்ற பேராபத்து சூழ்ந்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டதன் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அத்தனை நல வாரியங்களும் கலைக்கப்படாது காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை உறுதித் தன்மையை தமிழ்நாடு அரசு இதன் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளது என்பதாகவே நம்புகிறோம்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு தொழிலாளர் நலதுறைக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும், பரிந்துரைத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட கோரிக்கையான உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்று தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 


மக்கள் கருத்து

யோபுராஜ்Jul 25, 2024 - 05:10:51 PM | Posted IP 172.7*****

உப்பள முதலாளிகள் உப்பளத்துக்கு அருகில் பெட்டி கடை மாதிரி போட்டு தினமும் அதில் வரும் வருமாத்தை ஒரு தொழிலாளிக்கு கொடுக்கலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory