» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)

தூத்துக்குடியில் பில்டிங் காரன்ட்ரக்டரின் காரை திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தெர்மல் நகர்  பகுதியைச் சேர்ந்தர் பொண்ணு லிங்கம் மகன் ரவிச்சந்திரன் (55). பில்டிங் காண்ட்ராக்டர் இவர் நேற்று மாலையில் தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் தனது சொந்தமான பொலிரோ காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு   சென்றார் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை இதன் மதிப்பு 10 லட்சம் ஆகும். 

இது குறித்து அவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி  கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் காரை திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

மேலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் முத்தையாபுரத்தில் கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர். இது தொடர்பாக முள்ளக்காடு சவேரியார் புலத்தை சேர்ந்த மங்கலபாண்டி மகன் தங்கத்துரை (31 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

ஆண்டApr 2, 2023 - 03:32:22 PM | Posted IP 162.1*****

பரம்பரை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory