» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் மாயம்!
புதன் 22, மார்ச் 2023 10:50:02 AM (IST)
தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் முருகன் நகரை சேர்ந்தவர் நட்டார்கனி இவரது மகள் நவீனா இன்பா (14), இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கலா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கல்லூரி மாணவி
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகள் பவித்ரா (20), இவர் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேலூர் ரயில் நிலையத்தின் அருகில் புதியசாலை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)

ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை : சத்யநாராயண ராவ் பேட்டி!
புதன் 31, மே 2023 12:04:31 PM (IST)

சிவகுமார் சிMar 23, 2023 - 11:38:49 AM | Posted IP 162.1*****