» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடைநின்ற மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த காவல்துறையினருக்கு பாராட்டு!
புதன் 22, மார்ச் 2023 10:40:42 AM (IST)

ஆழ்வார்திருநகரியில் இடைநின்ற மாணவியை பள்ளியில் சேர்த்த காவல் துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த லோகநாதன் மகள் தாமரைக்கனி. நாசரேத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பு வந்தார். அவரது தாயார் மரணம் அடைந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்தனர். இதில் தாமரைக்கனி பள்ளிக்கு செல்லாமல் இடை நின்றது தெரிய வந்தது.
உறவினர் வீட்டில் தங்கி இருந்த தாமரைக்கனியை அழைத்துப் பேசி மீண்டும் அவரைப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை டிஎஸ்பி மாயவன் மேற்கொண்டார். அதன்படி அந்த மாணவிக்கு தேவையான பாட புத்தகம், பேக் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். நேற்றிலிருந்து அவர் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பதற்காக மீண்டும் சென்று வருகிறார். ஏற்கனவே கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார்திருநகரி டீக்கடையில் வேலை பார்த்தது வந்தநிலையில், அவரை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க போலீஸ் டிஎஸ்பி ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மேற்படி மாணவியை கண்டறிந்து, தேவையான உதவிகளை செய்து மீண்டும் பள்ளியில் சேர்த்து பள்ளிப்படிப்பை தொடர வைத்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமையிலான ஆழ்வார்திருநகரி எஸ்.ஐ. செல்வன் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையத்தின் அருகில் புதியசாலை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)
