» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆன்லைன் மோசடி: ரூ.4.67 லட்சம் பணம் மீட்பு
புதன் 22, மார்ச் 2023 7:44:40 AM (IST)
தூத்துக்குடியில் ஆன்லைன் மோசடியில் இழந்த வாலிபர் இழந்த ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 499 பணம் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனுக்கு கடந்த 2.3.2023 அன்று வந்த குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதில் இருந்த லிங்கை கார்த்திக் திறந்து விவரங்களை பதிவு செய்து உள்ளார். அதனை பயன்படுத்தி மர்ம ஆசாமி, கார்த்திக்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 500 பணத்தை மோசடியாக திருடி சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதே போன்று கடந்த 9.5.2022 அன்று விளாத்திகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நாகு மகன் சங்கர் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் வந்த வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரத்தை பார்த்து அதிலுள்ள எண்ணை தொடர்புகொண்டு வேலைக்காக ரூ.40 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி அசோக் நகரை சேர்ந்த பன்வாரிலால் சர்மா மகன் சுசில்குமார் சர்மா என்பவரது வங்கி கணக்கில் இருந்து சுசில்குமார் சர்மாவின் அனுமதியின்றி பல தவணைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 999 எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த புகாரின் பேரிலும் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 499 பணம் மீட்கப்பட்டது. இந்த பணத்தை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், அதன் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)
