» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசிக : கோவில்பட்டியில் பரபரப்பு

புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)

கோவில்பட்டியில் எச்.ராஜா காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், கிருஷ்ணன் கோவில் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மாலையில் காரில் வந்தார். அவர் மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, கூட்டத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மந்தித்தோப்பு ரோடு சந்திப்பு மங்கள விநாயகர் கோவில் முன்பு தங்கள் கட்சி கொடியுடன் எச்.ராஜா காரை வழிமறிக்க முயற்சி மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்திரவின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சதுரகிரி, மாநில துணை செயலாளர் இளஞ்சேரன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பெஞ்சமின் உள்பட 25 பேரை கைது செய்தார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory