» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 21, மார்ச் 2023 11:31:03 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (65), இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா. இவர்கள் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை்ககு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்து கிடந்தது.
இதுகுறித்து அவர் சென்னையில் உள்ள கருப்பசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)

பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)

Pethuselvi.T AnandMar 23, 2023 - 11:15:27 AM | Posted IP 162.1*****