» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் திருட்டு
செவ்வாய் 21, மார்ச் 2023 11:01:50 AM (IST)
தூத்துக்குடி அருகே லோடு வேனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பூலோகபாண்டி மகன் மாரிமுத்து (31). இவர் சொந்தமாக லோடு வேன் மூலம் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மறவன்மடம் - ராமநாச்சியார்புரம் ரோட்டில் மர டிப்போ முன்பு தனது வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலையில் வந்தபோது லோடு வேன் திருடுபோயிருந்தது. அதில் மர அறுக்கும் மிஷின் இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.25லட்சம் ஆகும். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

அவனுங்கMar 21, 2023 - 01:05:49 PM | Posted IP 108.1*****