» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3-வது நாளாக பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்!
ஞாயிறு 19, மார்ச் 2023 12:24:09 PM (IST)

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் இன்று 3வது நாளாக பல்வேறு கோரிக்கைகளை மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் 3-வது நாளாக மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தது. 2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும், குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்த வீடியோவையும் காண்பித்தார்.
பின்னர் அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் நடந்தே சென்று பார்வையிட்டர். தொடர்ந்து ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணி லாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
