» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற நண்பர்கள் - போலீஸ் விசாரணை
ஞாயிறு 19, மார்ச் 2023 12:20:11 PM (IST)
தூத்துக்குடியில் மதுபோதையில் வாலிபரை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி உமையம்மாள்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (25). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் கருப்பசாமியை அடித்து தாக்கினர். பின்னர் அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது சராமரியாக வீசி தாக்கினர்
பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)
