» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமாகாத விரக்தி: வாலிபர் தற்கொலை!
சனி 18, மார்ச் 2023 4:30:31 PM (IST)
ஆறுமுகநேரியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் இசக்கி முருகன் (33), பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் தனியே வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர் தனிமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதே பகுதியை சேர்ந்த இவரது பெரியப்பா மகனான முருகன் (44) மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது அங்கு இசக்கி முருகன் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

படிச்சMar 18, 2023 - 05:29:55 PM | Posted IP 162.1*****