» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சனி 18, மார்ச் 2023 2:50:34 PM (IST)

எட்டையாபுரம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) என்பவர் எட்டையாபுரம் அருகே திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திப்பனூத்து காலனி தெருவை சேர்ந்த சண்முகராஜ் மகன் சுடலைமுத்து (42) என்பவர் முத்துக்குமாரின் மாட்டுப் பண்ணைக்கு சென்று அங்கு இரும்பு பைப் தருமாறு கேட்டுள்ளார். 

இதற்கு முத்துக்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுடலைமுத்து முத்துக்குமாரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து சுடலைமுத்துவை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory