» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
சனி 18, மார்ச் 2023 11:52:12 AM (IST)

தூத்துக்குடியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மருத்துவர்களுக்கு உள்ளதுபோல், ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயர்கல்வி இடஓக்கீடு, கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பர நகர் விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைச் செயலாளர் இராமசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவகங்கை ரெங்கராஜன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகிகள் இரா. முருகன், ந.தங்ககுமார், த. பேச்சிமுத்து, ரெக்ஸலின், விண்ணரசி, ஞா.தங்கராஜன், ஞா.சுதாகர் யாபேல் சந்தோசம், க.தேவிகா, ஜோ.சாலமோன், வி.லியோ பிரின்ஸ் சாம், சு.ஜெயராஜ், இ.தியாகராஜன், இந்திராணி, ஜெ.மகேஷ்துரைசிங், நீர்மல்கோயில்ராஜ், சுரேஷ்குமார் ஜெ.மகாலிங்கம், அந்தோணி ஆரோக்கியராஜ் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

JebasinghMar 19, 2023 - 06:53:25 PM | Posted IP 162.1*****