» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுத் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை!

சனி 18, மார்ச் 2023 11:33:00 AM (IST)



தூத்துக்குடியில் புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினியை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் அவர்கள், "அரசு பொதுத்தேர்வு பணிகளில் பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனங்கள் செய்திடவேண்டும். பொதுத் தேர்வுகள் ஒளி மறைவின்றி நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டும், மாவட்ட அளவில் நடைபெறும் தேர்வுகளில் குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும், கடந்த 4 ஆண்டுகளாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணங்கள் குறித்த கணக்கு ஆய்வு செய்து அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்க வேண்டும், கல்வி சார்ந்த நிகழ்வுகளில் தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று மாவட்ட கல்வித் துறை இணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சீனி, மாவட்டச் செயலாளர் கஜேந்திரபாபு, மாவட்டப் பொருளாளர் கார்த்திகேயன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வானரமுட்டி செல்லத்துரை, வில்லிசேரி வெங்கடேசன், ஊத்துப்பட்டி ராஜமாணிக்கம், ஒட்டப்பிடாரம் மேரி, முடிவைத்தானேந்தல் கிறிஸ்டி, தூத்துக்குடி சிவ பெர்சியாள், பாரதியார் வித்யாலயம் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகநேரி கேஏ பள்ளி கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் சேகர் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ThillaiMar 18, 2023 - 05:19:15 PM | Posted IP 162.1*****

All the best

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory