» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை துவக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரம் போ் எழுதுகின்றனா்

ஞாயிறு 12, மார்ச் 2023 9:29:58 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை துவங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை 19ஆயிரத்து 997 மாணவா்-மாணவிகள் எழுதவுள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எல்.ரெஜினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத் தோ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 137 மாணவா்கள், 10 ஆயிரத்து 860 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 997 போ் எழுதுகின்றனா்.

 இத்தோ்வுக்காக 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பணியில் உள்ளனா். மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

170 பறக்கும் படை குழு, 23 வழித்தட அலுவலா்கள், 44 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், 91 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 91 அரசுத் துறை அலுவலா்கள், 1200 அறைக் கண்காணிப்பாளா்கள், 182 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான அலுவலா்கள் தோ்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory