» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.4½ லட்சம் நகை கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை!
ஞாயிறு 12, மார்ச் 2023 8:13:07 AM (IST)
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.4½ லட்சம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (74). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் நேற்று முன்தினம் காலை தனது மனைவியுடன் சொந்த ஊரான விளாத்திகுளத்திற்கு புறப்பட்டார். இதனால் வீட்டில் அவரது மாமியார் காமாட்சி (95) மட்டும் தனியாக இருந்து உள்ளார். அவருக்கு பாதுகாப்பாக நாய் ஒன்றும் இருந்தது. மேலும் அங்கு நடைபெற்று வரும் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களிடமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் ஊருக்கு செல்வதால் வீட்டில் வயதான மாமியார் இருப்பதால் அவரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு ராமச்சந்திரன் சென்றார்.
இதற்காக வீட்டின் முன்கதவை பூட்டிவிட்டு, பின்பக்க கதவை பூட்டாமல் இருந்துள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள் மாலையில் வீட்டின் பின்பக்க வழியாக ராமச்சந்திரன் வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது, அங்கிருந்த நாய் குரைத்தது. இதைத்தொடர்ந்து காமாட்சி யார் என்று சத்தம் போட்டார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியாததால் மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க சங்கிலிகள், மோதிரம் உள்பட 13 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இரவில் ராமச்சந்திரன் தனது வீட்டிற்கு வந்தார்.
அப்போது, வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் ஆகும்.இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ஆண்டMar 12, 2023 - 08:57:29 AM | Posted IP 162.1*****