» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவர் இறந்த 3-வது நாளில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
ஞாயிறு 12, மார்ச் 2023 8:08:17 AM (IST)
சாத்தான்குளம் அருகே கணவர் இறந்த 3-வது நாளில் அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (60) விவசாயி. இவரது மனைவி கோமதி (55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் சென்னையில் இருந்து வந்தனர். பெருமாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு வந்தனர். கடந்த 9-ந் தேதி உடல்நலம் பாதிப்பு காரணமாக பெருமாள் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிலையில் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் கோமதி மனவேதனையில் இருந்து வந்தார். கணவர் இறந்த 3-வது நாளான நேற்று கோமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து அவரது மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ் பெக்டர் பவுலோஸ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










