» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் காயமடைந்த சிறுவன் பரிதாப சாவு
ஞாயிறு 12, மார்ச் 2023 7:47:29 AM (IST)
வல்லநாடு அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் இசக்கிமுத்து (12). இவன் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 6-ந் தேதி இசக்கிமுத்து நாணல்காடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றான். அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இசக்கிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










