» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை

ஞாயிறு 12, மார்ச் 2023 7:43:08 AM (IST)

கயத்தாறு அருகே தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுடலைமணி (40). இவர் கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சுடலைமணி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுடலைமணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை வெள்ளிவிளையை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் சுதாகர் (27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. சுதாகருக்கு மதுபழக்கம் காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சுதாகர் வீட்டில் வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். 

உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory