» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்பிலான திருக்கை மீன் ரசாயனம் ஊற்றி அழிப்பு

சனி 11, மார்ச் 2023 9:34:16 PM (IST)



விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 80 லட்சம் மதிப்பிலான சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.இதனை நேற்று விளாத்திகுளம் வனத்துறையினா் ரசாயனம் ஊற்றி அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்து வேம்பாாிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக சுறா மீன் இறக்கை மற்றும் திருக்கை மீன் பூ கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார்  வேம்பார் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை போலீசார் நிறுத்த முயன்றனா்.ஆனால் லோடுவேன் நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை துரத்தி சென்று பிடித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் வாகனத்தை ஒட்டி சென்றவர் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் மகன் சாகுல் ஹமீது (34) என்பதும் சுமார் 80 லட்சம் மதிப்பிலான சுறா மீன் இறக்கைகள்,திருக்கை மீன் பூ ஆகியவற்றை கடத்த முயன்றது தெரிய வந்தது.இதனை அடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து வாகனம் மற்றும் சுறா மீன் இறக்கைகள் ,திருக்கை மீன் பூவை பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில் விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின் கணவர் பாண்டியராஜன் ஆகியோர் கடத்தலில் ஈடுபட்ட சாகுல் ஹமீதை விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன் இறக்கைகள்,திருக்கை மீன் பூ ஆகியவற்றை ரசாயனம் ஊற்றி புதைத்து அழித்தனா்.


மக்கள் கருத்து

அய்யாMar 12, 2023 - 09:01:26 AM | Posted IP 162.1*****

எட்டப்பன்... சிஎம் செல்லுக்கு மனு போடலாமே...

வே.எட்டப்பன்Mar 12, 2023 - 03:57:09 AM | Posted IP 162.1*****

இந்த காவல் நிலையத்தில் 2016டிசம்பர் 21வாகணவிபத்து FIR659 பதியபட்டு வழக்கு சிறிய காலண்டர் வழக்காக போடபட்டு வழக்கு CNRநம்பர் TNTT070003662018வழக்கு முடிக்கபட்டது.உண்மை நிலவரம் விபத்தில் 100சதவீதம் பாதிக்கபட்டு இன்று வரை படுத்த படுக்கையாக இருக்கிறேன்.100சதவீதம் பாதிப்படைந்த விபத்து வழக்கை சிறிய வழக்கு என்றும் காலண்டர் வழக்குஎன்றும் முடித்து விட்டார்கள்.காவல்துறைக்கு மரணவேதனையில்துடித்துகொண்டு இருக்கும் என் வாயால் நன்றி நன்றி வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory