» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி போட்டி: மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
சனி 11, மார்ச் 2023 7:58:29 PM (IST)

விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர்,தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டி வேம்பார் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
சிறய மாட்டு வண்டி களுக்கு வெற்றி இலக்காக 10 கிலோமீட்டர் தூரமும், பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இதில் 38 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
2-வது போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 3-வதாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சிறிய மாட்டுவண்டி போட்டியில் முதல் பரிசை புதியம்புத்தூர் விஜயகுமார் மாட்டு வண்டியும், பெரிய மாட்டு வண்டியில் முதல் பரிசை கடுகுசந்தை மோகன் மாட்டு வண்டியும், பூஞ்சிட்டு பந்தயத்தில் கயத்தாறு சரவணன் மாட்டு வண்டியும் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர் பாண்டியன், மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்தையாசாமி, காங்கிரஸ் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், கிளை செயலாளர்கள் கருப்பசாமி,ஆறுமுகச்சாமி சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










