» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காற்றாலை நிறுவனத்தை கண்டித்து போராட்டம் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு!
சனி 11, மார்ச் 2023 7:54:26 PM (IST)

விளாத்திகுளம் அருகே காற்றாலை நிறுவனத்தை கண்டித்து அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கே. குமார ரெட்டியாபுரத்தில் மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே. குமார ரெட்டியாபுரத்தில் காற்றாலை நிறுவனத்தை எதிர்த்து மார்ச் 3ஆம் தேதி கம்மாய்க்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்பு மார்ச் 8 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காற்றாலை நிறுவனத்திற்கும் கே. குமாரரெட்டையாபுர பொது மக்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் இன்று வழக்கம் போல் காற்றாலை நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தன.
இதனைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் காற்றாலை நிறுவனத்தின் பணியினை தடுத்து நிறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்தில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் போராட்டத்தில் கலந்து கொண்டார். இப்போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வினோத் கோவில்பட்டி கோட்டாட்சியர் திங்கள் கிழமை நேரில் வந்து ஆய்வு செய்து தீர்வு காணும் வரை ஊர் பகுதிக்குள் காற்றாலை நிறுவனத்தின் பணிகள் எதுவும் நடைபெறாது என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
உங்களுக்குMar 12, 2023 - 09:07:47 AM | Posted IP 162.1*****
கரெண்ட் வேணும்... காற்றாலை வேண்டாம் அப்படித்தானே... பத்து நாளுக்கு கரெண்ட் இல்லாம இருந்து பாருங்க... அப்புறம் தெரியும்... கரெண்ட் எவ்ளோ முக்கியம் வீட்டுக்குன்னு...
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











குமார்Mar 12, 2023 - 09:49:17 AM | Posted IP 162.1*****