» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹெல்மெட் அணியாத பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் : எஸ்பி உத்தரவு

சனி 11, மார்ச் 2023 3:49:20 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

குமரி மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் படி பொதுமக்களுக்கு எஸ்பி ஹரிகிரண் பிரசாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சிகளையும் போலீசார் நடத்தி வருகின்றனர். அப்படி போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தும் வகையில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு: குளச்சல் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் ஒருவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தனது ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டார். அங்கிருந்து புறப்பட்டு சாலையில் சென்றபோது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் செல்போனில் பேசியபடி அவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார்.

இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கவனத்திற்கு சென்றது. உடனே இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் பெண் போலீஸ் ஏட்டு போக்குவரத்து விதிகளை மீறியது தொியவந்தது.

அதைத்தொடர்ந்து அந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து குளச்சல் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் போக்குவரத்து விதிகளை மீறியதாக பெண் போலீஸ் ஏட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory