» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி: காதல் விவகாரத்தில் பரபரப்பு!
வெள்ளி 10, மார்ச் 2023 7:36:26 PM (IST)
எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியுடன் மாயமான வாலிபர், காவல் நிலையம் அருகே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த பிரசாந்தன் மகன் துஷாந்தன் (20), பெயிண்டர். இவர் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியை காதலித்து வந்தாராம். கடந்த சில தினங்களுக்கு முன் ஊரை விட்டு ஓடி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே மகள் காணாமல் போனது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் எட்டயபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இரண்டு பேரையும் மீட்டு எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துஷாந்தன்,சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது, காவல் நிலையம் அருகே இருந்த உடைந்த கண்ணாடியை எடுத்து தனது கழுத்தை திடீரென அறுத்து கொண்டார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











அகதிகள்Mar 10, 2023 - 09:20:27 PM | Posted IP 162.1*****