» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி 2ஆம் கேட் 13ம் தேதி முதல் மூடல்: தெற்கு ரயில்வே தகவல்!

வெள்ளி 10, மார்ச் 2023 4:06:45 PM (IST)

தூத்துக்குடி 2ஆம்  ரயில்வே கேட் 13ம் தேதி இரவு முதல் 15ஆம் தேதி காலை வரை மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை முதல் தூத்துக்குடி வரைவிலான இரட்டை வழி பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீளவிட்டான் வரை இரட்டை வழி பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை இரட்டை வழி பாதை அமைப்பதற்காக தண்டவாளங்கள் பொருத்து பணி, நடைமேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தூத்துக்குடி நகரத்திலிருந்து தருவைகுளம் சாலையை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள 2வது ரயில்வே கேட் பகுதியில் வருகிற 13ம் தேதி இரவு 10.00 மணி முதல் 15ஆம் தேதி காலை 06.00 மணி வரை இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் காரணமாக மேற்கண்ட நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படும். எனவே 1வது கேட் வழியாக சாலை போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு  தெற்கு ரயில்வே முதுநிலை மேலாளர் (சிவில்) தங்கவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

BalamuruganMar 12, 2023 - 10:12:00 AM | Posted IP 162.1*****

விரைவில் பாலம் அமைக்க MP ஆவணசெய்யவேண்டும்.

ParamasivanMar 12, 2023 - 08:03:19 AM | Posted IP 162.1*****

Yes

Venkata krishnanMar 11, 2023 - 05:39:29 PM | Posted IP 162.1*****

People will be benefited if the traffic is fixed without much traffic congestion

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory