» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பாஜக விளம்பர போர்டுகள் கிழிப்பு
வெள்ளி 10, மார்ச் 2023 3:21:11 PM (IST)

தூத்துக்குடியில் பாஜக விளம்பர போர்டுகள் கிழிக்கப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் சங்கர பேரி அருகே பாரதிய ஜனதா கட்சி புதிய மாவட்ட தலைமை அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தலைமையில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா காணொளி மூலமாக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகளை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது பாஜக தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











S.M.SundaramMar 10, 2023 - 08:30:49 PM | Posted IP 162.1*****