» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
புதன் 1, மார்ச் 2023 10:20:10 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
தூத்துக்குடி சிவந்தை சந்திப்பில் 43வது வட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், வட்ட பிரதிநிதி சங்கர், இளைஞர் அணி பாஸ்கர், மூர்த்தி, ஐகோர்ட், குமார், ஹரி சங்கர், சுந்தர், ராமசந்திரன், சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் 14வது வார்டு திமுக சார்பில் வட்ட செயலாளர் பா. காளிதுரை தலைமையில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொது மக்களுக்கு இனிப்புகளும் வயதான பெண்களுக்கு சேலைகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் திமுக பிரமுகர்கள் பாலசுப்பிரமணியன், கோவிந்த ராஜ், மீனாட்சி சுந்தரம், செல்வம், மகேஷ், மகேந்திரன், நடராஜன், கண்ணன், ஜான்சன், விக்னேஷ், ஆனந்த், சிவா, மாரிசெல்வி, சாந்தி, நந்தினி, லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளத்தில்

விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடியினை தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அயன்ராஜ், விளாத்திகுளம் நகரச் செயலாளர் வேல்ச்சாமி, தி.மு.க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தி.மு.க கழகத் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாப்பிள்ளையூரணி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர் மெயின் சாலையில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய அமைப்பாளர் ஜெஸிந்தா, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
