» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற வங்கிகணக்கு: அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)
பிஎம் கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் தவணைத் தொகையைப் பெற அஞ்சல்துறை உதவுகிறது.
தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்கப்பட உள்ள 13வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர் / கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 3.17 லட்சம்விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6815 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்துறையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும்பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒருசிலநிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகணக்கு துவங்கமுடியும்.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராமஅஞ்சல்ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கிகணக்கு துவங்கி பயன்பெறுமாறு அஞ்சல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றிற்கு ரூ.6000/- வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன்நி தி' என்ற திட்டம் 2018-ஆம்ஆண்டில்துவங்கப்பட்டது. ஒவ்வொருஆண்டும் 3 தவணையாக (ரூ.2000/-வீதம்) இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படுகின்றது. திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 12 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம சபைக் கூட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் - ஆட்சியர் உறுதி!!
புதன் 22, மார்ச் 2023 3:09:51 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)
