» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

கருத்து வேறுபாடு காரணமாக வட்டாட்சியரின் மனைவி பிரிந்து சென்றுள்ள நிலையில், அவர்களது 2 குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் ஞானராஜ். இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிரேசி விஜயா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிரேசி விஜயா கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய தனது 2 குழந்தைகளையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கணவர் ஞானராஜ் தன்னுடன் அழைத்து விட்டதாகவும், குழந்தைகளை சரிவர பராமரிக்காமல் அவர் தனது உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், எனவே குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-3ல் கிரேசி விஜயா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் சேரலாதன் இன்று தீர்ப்பு கூறினார். அந்தத் தீர்ப்பில் குழந்தைகள் தந்தையின் பராமரிப்பில் இருப்பதை விட தாயின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இருப்பதே இயற்கை நீதி எனவே இரண்டு குழந்தைகளிலும் தாயான கிரேசி விஜயாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் கிரேசி விஜயாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் அதிசயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வந்த பின்னர் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கிரேசி விஜயா கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
அர்த்தமுள்ள வாழ்க்கைFeb 8, 2023 - 11:16:11 PM | Posted IP 162.1*****
இப்படி பிரிந்து வாழ்வதில் எந்த பயனும் இல்லை பேசி தீர்க்கமுடியாத விஷயமே இல்லை..குழந்தைங்களுக்காக சேர்ந்து வாழுங்கள்..
அர்த்தமுள்ள வாழ்க்கைFeb 8, 2023 - 11:16:11 PM | Posted IP 162.1*****
இப்படி பிரிந்து வாழ்வதில் எந்த பயனும் இல்லை பேசி தீர்க்கமுடியாத விஷயமே இல்லை..குழந்தைங்களுக்காக சேர்ந்து வாழுங்கள்..
மேலும் தொடரும் செய்திகள்

மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்
புதன் 22, மார்ச் 2023 2:52:51 PM (IST)

தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
புதன் 22, மார்ச் 2023 12:27:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்: மார்ச் 29ம் தேதி நடக்கிறது - எஸ்பி தகவல்!!
புதன் 22, மார்ச் 2023 11:04:48 AM (IST)

கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி உட்பட 2பேர் மாயம்!
புதன் 22, மார்ச் 2023 10:50:02 AM (IST)

அர்த்தமுள்ள வாழ்க்கைFeb 8, 2023 - 11:16:11 PM | Posted IP 162.1*****