» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி

புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இருதயராஜ் இன்று உடல் நலைக்குறைவால் காலமானார்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இருதயராஜ் (64) 1986 ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2018ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

இருதயராஜ் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை குறிப்பாணையின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமையில் 16 போலீசார் இருதயராஜ் அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 

இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் ரவீந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், காளிபாண்டி, வீரராகவன், சங்கர நாராயணன், சேர்மராஜ், , ஹேமா உட்பட தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 16 போலீசார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓய்வு பெற்ற காவலர் பொதுநலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் ஜெபமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory