» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஸ்டூடியோ பூட்டை உடைத்து ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
புதன் 8, பிப்ரவரி 2023 10:11:39 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகேஷ் (43), இவர் தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோடு, மாப்பிளையூரணி விலக்கு ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் தேதி இரவு ஸ்டுடியோவை பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த கேமரா லென்ஸ், லைட் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் இறந்த வழக்கு: வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை
புதன் 22, மார்ச் 2023 7:56:59 AM (IST)

ஆன்லைன் மோசடி: ரூ.4.67 லட்சம் பணம் மீட்பு
புதன் 22, மார்ச் 2023 7:44:40 AM (IST)

தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி : எச்.ராஜா பேட்டி
புதன் 22, மார்ச் 2023 7:34:24 AM (IST)

தூத்துக்குடியில் மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு காவல்துறையினர் அஞ்சலி!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)

எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசிக : கோவில்பட்டியில் பரபரப்பு
புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

aandaFeb 8, 2023 - 10:42:27 AM | Posted IP 162.1*****