» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடனுதவி முகாம்கள் : ஆட்சியர் தகவல்
புதன் 8, பிப்ரவரி 2023 8:06:49 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு கடனுதவி முகாம்கள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்ம்ரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர்கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு வணிகக் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் ஆகியவை ரூ.10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் 4% முதல் 8% வரை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
திருச்செந்தூர், உடன்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக கடனுதவி முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. ஆறுமுகநேரி, காயல்பட்டணம், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்தவர்களுக்கு முகாம் 09.02.2023 அன்று திருச்செந்தூர் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நடைபெற உள்ளது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், கயத்தார், வானரமுட்டி, கழுகுமலை பகுதியைச் சார்ந்தவர்களுக்கு 14.02.2023 அன்று தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோவில்பட்டி மெயின் கிளையில் நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் முகாம்களில் வழங்கப்படும். கடனுதவி கோருபவர்கள் சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் மற்றும் தொழில் திட்ட அறிக்கை (ரூபாய் 1 இலட்சத்திற்கு மேற்பட்டிருப்பின்) ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகச் செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலி
சனி 3, ஜூன் 2023 3:47:18 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)
